BBC News, தமிழ் - முகப்பு

Top story

பிற செய்திகள்

உண்ணக்கூடிய மண்ணையும் மலையையும் கொண்ட அற்புதத் தீவு - எங்குள்ளது?

இயற்கையே செய்த புவியியல் ஒப்பனை காரணமாக பழுப்பு படிந்த நீரோடைகள், கருஞ்சிவப்பு நிற கடற்கரைகள், உப்பு குகைகள் உருவாகியுள்ளன. இந்த வண்ண மயமான கலவையால்ஹோமுஸ் தீவு பெரும்பாலும் "ரெயின்போ தீவு" என்று அழைக்கப்படுகிறது. உலகின் ஒரே உண்ணத் தகுந்த மலை என்று கருதப்படும் இடமும் இது தான்.

சீனாவை எதிர்கொள்ள இந்திய விமானப்படையிடம் போதிய பலம் உள்ளதா?

பயண வரம்பு, தாக்குப்பிடிக்கும் திறன், ஆயுதம் தாங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், சுகோய் அல்லது ரஃபேல் விமானங்களை ஒப்பிடும்போது தேஜஸ் குறைவான திறன் கொண்டது என்கிறார் ஓய்வு பெற்ற ஏர் மார்ஷல் பி.கே. பார்போரா.

தமிழ் இளைஞர்களை பொது இடத்தில் மோசமாக தாக்கிய இலங்கை போலீஸ்காரர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று (22) இளைஞர்கள் இருவரை போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: முழு அட்டவணை

2020ஆம் ஆண்டே ஆஸ்திரேலியாவில் நடந்திருக்க வேண்டிய டி20 உலகக்கோப்பைப் போட்டிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

அறிவியல்

மனிதருக்கு பன்றி சிறுநீரகம்: அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை

மூளைச் சாவு ஏற்பட்டு மருத்துவ உதவியோடு வாழ்ந்து வருபவரின் ரத்த நாளத்தோடு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சிறுநீரகம் வேலை செய்கிறதா அல்லது அவரது உடல் நிராகரிக்கிறதா என அறுவை சிகிச்சை வல்லுநர்கள் சோதித்துப் பார்த்தனர்.

கலை கலாசாரம்

ஆஸ்கார் விருதுக்கு செல்லும் 'கூழாங்கல்' சினிமா எப்போது ரிலீஸ் ஆகும்? இயக்குநர் தகவல்

விருதுகளை குவித்த 'கூழாங்கல்' திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சர்வதேச அளவில் பல விருதுகளை இந்தப் படம் குவித்துள்ளது.

சிறப்புத் தொடர்

பருவநிலை மாற்றம்: உலகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தீர்வுகள் என்ன?

பருவநிலை மாற்றம் என்றால் என்ன, அதன் காரணமாக உலகில் உள்ள உயிர்களுக்கு உருவாகியுள்ள சிக்கல்கள் என்ன, அவற்றுக்குத் தீர்வுகள் என்ன என்பது தொடர்பான சில முக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு.

சிறப்புச் செய்திகள்

 • வைரமா, வனமா? ரூ.55,000 கோடி மதிப்புள்ள வைர சுரங்கம் பற்றிய ஆய்வு

  "நாங்கள் அனைவரும் காட்டுக்குச் சென்று பொருட்களை சேகரிக்கிறோம். அப்போதுதான் செலவு நடக்கும். அது இல்லையென்று ஆகிவிட்டால் நாங்கள் என்ன செய்வோம்? எங்களிடம் விவசாயம் செய்ய நிலம் அல்லது வேறு தொழில் இல்லை."

 • ஈவு இரக்கமில்லா ஆப்ரிக்க கன்னிப்பெண் மெய்க்காப்பாளர்களின் அறியப்படாத வரலாறு

  மேற்கு ஆப்ரிக்காவில் 1625 முதல் 1894வரை இருந்த டஜோமி சாம்ராஜ்ஜியத்தின் முன்கள வீரர்களாக டஹோமி அமேசான்கள் இருந்தனர். இப்போது அந்த பகுதி நவீன கால பெனின் ஆக உள்ளது. முந்தைய காலத்தில் வாழ்ந்த டஹோமி சாம்ராஜ்ஜியத்தின் பல தடயங்கள் இப்போதும் இங்குள்ளன.

 • வசூலில் உலகின் நம்பர் 1 திரைப்படம் எது தெரியுமா?

  சமீபத்தில் வெளியாகி உலகத்திலேயே அதிகமாக வசூலைக் குவித்திருக்கும் திரைப்படம் எது தெரியுமா? ஜேம்ஸ் பாண்டின் "நோ டைம் டு டை" அல்லது மார்வெல்லின் ஷாங்-சி, இல்லையென்றால் "லெஜண்ட் ஆப் தி டென் ரிங்ஸ்" என நீங்கள் நினைத்திருந்தால் அது தவறு.

 • கொலம்பஸுக்கு முன்பே அமெரிக்காவில் கால் பதித்த வைக்கிங் இனம்: விஞ்ஞானிகள் விளக்கம்

  ஒரு பெரிய சூரிய புயல் (சூரியனிலிருந்து மிகப் பெரிய அளவில் கதிர்வீச்சுக்கள் பூமிக்கு வருவது தான் சூரியப் புயல்) கிறிஸ்துவுக்குப் பிறகு 992ஆம் ஆண்டில் ஏற்பட்டது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது தான் விஞ்ஞானிகள் இந்த முறை துல்லியமான ஆண்டை குறிப்பிட வழி வகுத்தது.

 • பனிமலைகள் உருகுவதால் மனித குலத்துக்கு என்ன ஆபத்து?

  பனிப் பாறைகளில் உறைந்துள்ள நீரைப் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரத்துக்கும், மின்சாரத்துக்கும் உணவுக்கும் நம்பியுள்ளனர். ஆனால் பருவநிலை மாற்றத்தால் அவை உருகி ஓடிக் கொண்டிருக்கின்றன? அவை மாயமானால் நமக்கு ஏற்படும் இழப்பு என்ன?

 • Oh மணப்பெண்ணே: சினிமா விமர்சனம்

  கார்த்திக்கிற்கு நன்றாக சமைக்க வரும் என்பதையும் சுருதி ஒரு வாகன உணவகம் ஆரம்பக்க நினைத்ததும் தெரிகிறது. ஆகவே இருவரும் சேர்ந்து அந்தத் தொழிலில் முடிவுசெய்கிறார்கள். இதற்கிடையில் கார்த்திக்கை வீட்டோடு மாப்பிள்ளையாக தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்க ஒரு பெரிய தொழிலதிபர் முன்வருகிறார். வரதட்சணைக்காக அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள கார்த்திக்கும் ஒப்புக்கொள்கிறான்.

 • அண்ணாமலை VS செந்தில் பாலாஜி: ஊழல் தொடர்பாக ட்விட்டரில் தொடரும் மோதல்

  ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்த மூன்று குற்றச்சாட்டுகள் குறித்தும் தெளிவான ஆதாரங்கள் எதையும் அளிக்காமல், கணினி திரையில் எக்ஸல்ஷீட்டில் இருந்த ஒரு பட்டியலின் படத்தை மட்டும் அவர் வெளியிட்டதால், தி.மு.க. ஆதரவாளர்கள் #எக்ஸல்சீட்டு_அண்ணாமலை என்ற ஹாஷ்டாகை ட்ரெண்ட் செய்தனர்.

 • மற்றுமோர் அமைச்சர் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

  ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் ஊழல் செய்ததாக ட்விட்டரில் குற்றம்சாட்டியிருந்த மாநில பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை, தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மீது புகார் தெரிவித்துள்ளார்.

 • "நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல" - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

  ஊசி போட்டுக் கொண்ட மறுநாளே அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது. ஏப்ரல் 16ஆம் தேதி நினைவிழந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 • பருவநிலை மாற்றம் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தும்: அமெரிக்க உளவுத்துறை

  பருவநிலை மாற்றம் அதிகரிக்கும் சர்வதேச பதற்றத்தை மேலும் உருவாக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் மதிப்பீட்டில் அமெரிக்க உளவுத்துறை அமைப்பு எச்சரித்துள்ளது.

தொலைக்காட்சி

புகைப்பட தொகுப்பு

பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா: மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள்

இந்த புகைப்படம் சுமார் 158 நாடுகளிலிருந்து வந்த ஒரு லட்சம் புகைப்படத்திலிருந்து வெற்றிப் பெற்ற புகைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

ஊடகவியல் கல்வி

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்

ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்